DFCCIL நிறுவனம் தற்போது, Electrical Department பிரிவில் பணிக்கான பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைவாக இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.
DFCCIL நிறுவன வேலைவாய்ப்பு:
Dedicated Freight Corridor Corporation of India Limited நிறுவனம் தற்போது, Electrical Department பிரிவில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சம் 65 வயது என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Level 6 முதல் 11 வரையுள்ள ஊதியத்தில் ரயில்வே துறையில் ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும் மற்றும் இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் 24/02/2023 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறது.