SAI இந்திய விளையாட்டு ஆணையம் High Performance Analyst, Performance Analysts போன்ற பணிகளுக்கென உள்ள 54 காலி இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் பணி குறித்த கூடுதல் தகவல்களை அறிய கீழே பார்வையிடவும்.
SAI ஆணைய வேலைவாய்ப்பு:
High Performance Analyst, Performance Analysts பணிகளுக்கென்று காலியாக உள்ள 54 பணியிடங்களை நிரப்புவது பற்றி அறிவிப்பில் SAI விளையாட்டு ஆணையம் கூறியிருந்தது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பானது பணியின் அடிப்படையில் அதிகபட்சம் 35 மற்றும் 40 க்குள் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணி சம்பந்தப்பட்ட துறையில் Graduate அல்லது Postgraduate பட்டம் முடித்திருக்க வேண்டும் மற்றும் இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.60,000/- முதல் ரூ.1,05,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
SAI ஆணையத்தின் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் 07/02/2023 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.