பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் ( BECIL ), Technical Assistant, Store Keeper, Cloud Architect, Technology Associate உள்ளிட்ட பணிகளுக்கு 14 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
BECIL நிறுவன வேலைவாய்ப்பு:
Technical Assistant, Store Keeper, Cloud Architect, Technology Associate ஆகிய பணிகளுக்கு 14 காலியிடங்கள் உள்ளதாக BECIL நிறுவனம் அறிவிப்பில் கூறியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயதானது பணியை பொறுத்து குறைந்தபட்சம் 18 என்றும், அதிகபட்சம் 35 முதல் 40க்குள் இருக்கவேண்டும் என்று அறிவித்துள்ளது.
மேலும் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் B.E, B.Tech, MCA, M.Sc, M.E, M.Tech, B.Sc, Post-graduate, Diploma போன்ற ஏதேனும் ஒரு பாட பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியம் ரூ.13,900/- முதல் ரூ.1,60,000/- வரை பணியை பொறுத்து அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
BECIL நிறுவன பணிக்கு தகுதியுடையவர்கள் நேர்முகத்தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். மேலும், பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் முறையில் 23.02.2023 மற்றும் 28.02.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.