The Institute of Company Secretaries of India (ICSI) நிறுவனம், CRC Executive பணிக்கென 40 காலியிடங்கள் உள்ளதால் அதை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பணி பற்றிய கூடுதல் விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
ICSI வேலைவாய்ப்பு:
ICSI நிறுவனத்தில், CRC Executive பணிக்கு 40 காலியிடங்கள் உள்ளதால் அதை நிரப்ப அறிவிப்பு தற்சமயத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பானது அதிகபட்சம் 30 ஆக இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் Institute of Company Secretaries of India- வில் Associate Member ஆக இருக்க வேண்டும் மற்றும் Post Qualification- ல் 2 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். பணிக்கென தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியம் ரூ.33,000/- முதல் ரூ.40,000/- வரை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
CRC Executive பணிக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேற்கண்ட தகுதிகளை கொண்ட நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் முறையில் 01/03/2023 என்ற இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.