தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் தற்போது Project Scientist – II, Project Scientist –I, Project Scientific Assistant, Project Technician, Project Jr. Asst பணிகளுக்கென்று 89 காலியிடங்கள் உள்ளதால் தகுதியுள்ள மற்றும் திறமையுள்ள நபர்களை கொண்டு நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
NIOT வேலைவாய்ப்பு:
தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், Project Scientist – II,Project Scientist –I, Project Scientific Assistant, Project Technician, Project Jr. Asst பணிகளுக்கான 89 காலியிடங்களை நிரப்புமாறு கூறியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயதானது பணியின் அடிப்படையில் குறைந்த பட்சமாக 35 எனவும், அதிகபட்சம் 50 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் M.E, M.Tech, Ph.D, M.Tech, B.E, B.Tech, MSc, Diploma, BSc, BCA போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும் மற்றும் பணிக்கென்று தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிவாரியாக ரூ.20,000/- முதல் ரூ.57,000/-வரை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
NIOT நிறுவன பணிக்கு தகுதி வாய்ந்தவர்கள் walk in interview/ Test மூலமாக நியமனம் செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைனில் விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.