மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (CDAC), Sr. Assistant பணிக்காக உள்ள ஒரே ஒரு காலி இடத்தை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் விரைவாக இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
CDAC வேலைவாய்ப்பு:
Sr. Assistant பணிக்கான ஒரு காலி இடத்தை நிரப்புவது குறித்து CDAC அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate பட்டம் முடித்திருக்க வேண்டும் மற்றும் Assistant பணிக்கென்று தேர்வு செய்பவர்களுக்கு ரூ.35,400/- வரை மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
CDAC நிறுவன பணிக்கு தகுதியுடையவர்கள் Personal Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பெற்று விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.