இந்திய அஞ்சல் துறையில் Gramin Dak Sevaks (GDS) (Branch Postmaster(BPM) / Assistant Branch Postmaster(ABPM)) பணிகளுக்கென 40,889 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. மேலும் பணி குறித்த கூடுதல் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அஞ்சல் துறை வேலைவாய்ப்பு:
Gramin Dak Sevaks (GDS) (Branch Postmaster(BPM) / Assistant Branch Postmaster(ABPM)) பணிகளுக்கென்று உள்ள 40,889 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு இந்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும், அதிகபட்சம் 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் உள்ளூர் மொழியை எழுத, படிக்க தெரிந்து வைத்திருத்தல் அவசியமாகும். பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாத ஊதியம் பணியின் அடிப்படையில் குறைந்த பட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.29,380/- வரை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
GDS பணிக்கு தகுதியான நபர்கள் Merit list மூலமாக நியமிக்கப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விரைவாக நாளைக்குள் (16/02/2023) விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.