ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 1 காலிப்பணியிடத்திற்கான Manager பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இவ்வறிப்பின் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளனர்.
RVNL-ன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
தற்போது காலியாக உள்ள 1 காலிப்பணியிடத்தை நிரப்பும் பொருட்டு RVNL நிறுவனமானது தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவித்து, இந்த அறிவிப்பின் மூலம் Manager பதிவுக்கான தகுந்த நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 56 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மத்திய அல்லது மாநில அரசில் Level 7 மற்றும் 8 அளவில் ஊதியம் பெறுபவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு RVNL நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு Parent Pay உடன் Deputation Allowances ஊதியமாக வழங்கப்படுகிறது.
மேற்கண்ட தகுதிகளை பெற்ற நபர்கள் பிரதிநிதித்துவம் (Deputation) அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ பக்கத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்த பின்பு amit.kumar3@rvnl.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.