RCFL நிறுவனம், Officer ( CCLAB ) மற்றும் Engineer (Environmental) E1 Grade பணிக்காக காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு 6 காலியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
RCFL நிறுவன வேலைவாய்ப்பு:
தற்போது RCFL நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Officer ( CCLAB ) பணிக்கு 4 பணியிடங்களும், Engineer (Environmental) E1 Grade பணிக்கு 2 பணியிடங்களும் என மொத்தம் 6 பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பு 01/12/2023 தேதிக்கு 30 வயது மிகாமல் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பணி சம்பந்தப்பட்ட பிரிவில் B.E, B.Tech, B.Sc, Engineering (Environmental), M.E, M.Tech போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.79,280/- ஊதியமாக அறிவித்துள்ளது.
மேலும் Officer மற்றும் Engineer பணிக்கு தகுதியுடைய நபர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரியின் மூலம் 13/02/2023 தேதி முடிவதற்குள் விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.