Flipkart நிறுவனம், Manager ( Marketplace Fulfillment) பணிக்கென காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது மற்றும் இப்பணிக்கென இரண்டு காலிப்பணியிடங்கள் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
Flipkart நிறுவன வேலைவாய்ப்பு:
தற்போது FlipKart நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின்படி, Manager ( Marketplace Fulfillment) பணிக்கென இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்க பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பு பற்றி தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் Post Graduate முடித்திருக்க வேண்டும் மற்றும் பணி சார்ந்த துறையில் குறைந்தது 2 முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு மாத ஊதியம் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
Manager பணிக்கு தகுதியுள்ள நபர்கள் நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இறுதி தேதிக்குள் விரைந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.