ரயில் இந்தியா டெக்னிக்கல் அண்ட் எகனாமிக் சர்வீஸ் (RITES) லிமிடெட் நிறுவனத்தில் Solid Waste Expert (Senior), Solid Waste Expert (Deputy) போன்ற பல்வேறு பதவிகளுக்காக 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு, தகுதியும் திறமையும் வாய்ந்த நபர்கள் மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் இப்பணி குறித்த கூடுதல் விவரங்களை இந்த பதிவில் தெரிந்து கொண்டு பயன் பெறுங்கள்.
RITES நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விவரங்கள்:
RITES நிறுவனமானது 2023 ஆண்டிற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி Solid Waste Expert (Senior) பணிக்கு 2 காலிப்பணியிடமும், Solid Waste Expert (Deputy) பணிக்கு 2 காலிப்பணியிடமும், Used Waste Expert (Senior) பணிக்கு 2 காலிப்பணியிடமும், Used Waste Expert(Deputy) பணிக்கு 2 காலிப்பணியிடமும் , Senior Procurement Specialist பணிக்கு 1 காலிப்பணியிடமும் , Senior Expert (Standards & Specifications) பணிக்கு 1 காலிப்பணியிடமும், என ஆறு பதவிகளுக்காக மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் Solid Waste Expert (Deputy) மற்றும் Used Waste Expert(Deputy) பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயதானது 01.01.2023 தேதியின் படி அதிகபட்சமாக 40 வயதாகவும், இதர பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் வயதானது 01.01.2023 தேதியின் படி அதிகபட்சமாக 50 வயதாகவும் இருக்க வேண்டும்.
இந்நிலையில் Senior Expert (Standards & Specifications) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் MBA/Postgraduate in Management plus, B.Tech/B.E, (Civil/Chemical/Mechanical/
மேலும் இப்பணிக்கு விண்ணப்பித்த நபர்கள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு, 10 சதவிகிதம் முன்னனுபவம் அடிப்படையிலும் மற்றும் 90 சதவிகிதம் நேர்காணல் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் General/OBC பிரிவினை சேர்ந்தவர்கள் ரூ.600 தேர்வு கட்டணமும், EWS / SC/ST/ PWD பிரிவினை சேர்ந்தவர்கள் ரூ.300 தேர்வு கட்டணமும் செலுத்த வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விவரங்களின் படி, 13.02.2023 தேதிக்குள் ஆன்லைனில் தாமதிக்காமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.