RCFL-ன் வேலைவாய்ப்பு விவரங்கள் :
Officer (CCLAB) E1 Grade, Engineer(Environmental) E1 Grade போன்ற பதவிகளுக்காக RCF நிறுவனமானது தற்போது 2023 ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு, காலியாக உள்ள 6 காலிப்பணியிடங்கள் திறமை வாய்ந்த நபர்கள் கொண்டு நிரப்பப்பட உள்ளது. மேலும் இப்பணிக்கு Officer (CCLAB) E1 Grade பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 01.12.2022 தேதியின் படி 35 வயதாகவும், Engineer (Environmental) E1 Grade பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 01.12.2022 தேதியின் படி 30 வயதாகவும் இருக்க வேண்டும். இந்நிலையில் OBC பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளை அதிகாரப்பூர்வ பக்கத்தில் காணவும்.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் UGC / AICTE இடமிருந்து அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில் Officer (CCLAB) E1 Grade பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வேதியியல் பாடப்பிரிவுகளில் MSc / Phd பட்டம் பெற்றிருக்க வேண்டும், Engineer(Environmental) E1 Grade பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வேதியியல் சார்ந்த அல்லது B.E /B.Tech./ B.Sc Engg. (Environmental Engg) அல்லது M.E/M.Tech/M.Sc Engg(Environmental Engg) போன்ற படிப்புகளில் 60% தேர்ச்சியுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பணி சார்ந்த துறைகளில் 01.12.2022 தேதியின் 2 வருட முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.
இப்பணிக்கு தனிப்பட்ட நேர்முகத்தேர்வின் மூலம் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மேலே கூறிய தகுதிகளை பெற்ற நபர்கள் OBC மற்றும் EWS பிரிவை சேர்ந்தவர்கள் ரூ.1000 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும், SC/ST/PwBD/ExSM/பெண்கள் ஆகியோர் விண்ணப்ப கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் RCFL-ன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான www.rcfltd.com என்ற இணைப்பின் மூலம் தகுந்த ஆவணங்களுடன் 13.02.2023 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.