PGIMER நிறுவனம் தற்போது Senior Residents பணிக்கு காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விரைவாக இறுதிநாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
PGIMER நிறுவனத்தின் வேலைவாய்ப்பு:
Senior Residents பணிக்கு இரண்டு காலியிடங்கள் இருப்பதால் அதை நிரப்ப வேண்டி முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (PGIMER) தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் MBBS Graduate முடித்திருக்கவேண்டும்.
மேலும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும். Senior Residents பணிக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றை 02/02/2023 நாளுக்குள் விரைவாக அனுப்பி பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது.