டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனம் தற்போது Manager, Legal Officer, Assistant Manager உள்ளிட்ட பணிகளுக்கான காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு 8 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை பற்றிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
DIC நிறுவன வேலைவாய்ப்பு:
தற்போது டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், Manager, Legal Officer, Assistant Manager ஆகிய பணிகளுக்கு 8 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரிகளில் Computer Engineering மற்றும் LLB Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் பணி சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக அவர்களின் பணியை பொறுத்து ரூ.83,000/- முதல் ரூ.1,00,000 வரை வழங்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அதனை இறுதி நாள் முடிவதற்குள் ஆன்லைன் முறையில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.