HDB பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் தற்போது, Gold Loan Executive பணிக்கு காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு ஒரே ஒரு காலிப் பணியிடம் மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் பணி குறித்த கூடுதல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
HDB நிறுவன வேலைவாய்ப்பு:
தற்போது HDB பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Gold Loan Executive பணிக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டும் உள்ளதாக அறிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணி சார்ந்த துறையில் குறைந்தது 2 ஆண்டு முதல் 4 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. Executive பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் Good Communication, Enthusiasm மற்றும் High level of Self Drive ஆகிய திறன்கள் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் Personal Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இறுதிநாள் முடிவதற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.