வேலைவாய்ப்பு விவரங்கள் :
Dy.CPM/PM(Civil) மற்றும் AGM/JGM/DGM போன்ற பதவிகளுக்கான காலிப்பணியிடத்தை நிரப்புவதற்காக DFCCIL நிறுவனத்தில் இருந்து ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள Dy.CPM / PM(Civil) பதவிக்கு 3 மற்றும் AGM/JGM/DGM பதவிக்கு 1 என்று ஆக மொத்தமாக 4 காலிப்பணியிடங்கள் திறன் வாய்ந்த பணியாளர்களை கொண்டு நிரப்பப்பட உள்ளது. மேலும் இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 55 ஆக இருப்பது அவசியம்.
இந்நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களின் குரூப் A அல்லது பணி சார்ந்த துறைகளில் 12 வருட அனுபவத்துடன் பணியாற்றியிருக்க வேண்டும், அல்லது PSU நிறுவனத்தில் Dy.CPM/PM(Civil) பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் Rs.90000-240000 (IDA) E6 என்ற ஊதிய அளவில் 4 ஆண்டுகளும், AGM/JGM/DGM பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் Rs.80000-220000 (IDA) E5 என்ற ஊதிய அளவில் 4 ஆண்டுகளும் பணியாற்றி இருக்க வேண்டும். மேலும் இந்த நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு Parent Pay Plus Deputation Allowance படி தகுந்த ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பிரதிநிதித்துவம் (Deputation) அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட தகுதிகளை பெற்ற மற்றும் ஆர்வம் உள்ள நபர்கள் அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் அதிகார அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.