தற்போது மத்திய அரசின் RCFL லிமிடெட் நிறுவனம், Officer (Marketing) பணிக்கென காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் நாளைக்குள் விரைவாக விண்ணப்பிக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
RCFL நிறுவன வேலைவாய்ப்பு:
RCFL லிமிடெட் நிறுவனம், Officer ( Marketing ) பணிக்காக 18 காலிப்பணியிடங்கள் இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சம் 35 முதல் 47 க்குள் இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் MBA , MMS அல்லது Graduate Diploma ஆகிய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மாத ஊதியம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை வழங்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் Officer பணிக்கு தகுதி வாய்ந்தவர்கள் Online Test மற்றும் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 29/01/2023 தேதிக்குள் விரைவாக ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.