Reserve Bank of India (RBI) வங்கியானது Medical consultant பதவிக்கான 1 காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பணி குறித்த கூடுதல் தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
RBI வேலைவாய்ப்பு விவரங்கள் :
இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) Medical consultant பதவிக்கான ஒப்பந்த அடிப்படையிலான பகுதி நேர வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த பதவிக்காக 1 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு காலியிடம் நிரப்படுகிறது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் MBBS மற்றும் ALLOPATHY-ல் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். மேலும் 2 வருடம் ஏதேனும் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது மருத்துவத்தில் அனுபவம் இருக்க வேண்டும். மேற்கூறிய தகுதிகளை பெற்று தேர்வு செய்யப்படும் மருத்துவர்களுக்கு 1 மணி நேரத்திற்கு ரூ.1000 ஊதியமாக வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் பணி தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடவும்.
ஒப்பந்த அடிப்படையிலான இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். குறிப்பாக, தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் மருத்துவ ரீதியாக தகுதியானவர்கள் என்றால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலே கூறிய தகுதிகளை பெற்ற நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 17.02.2023 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். மேலும், இறுதி நாளுக்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.