NPCI நிறுவனம் தற்போது, வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Advisory Services பணிக்கென காலியிடங்கள், உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி தேதிக்குள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
NPCI நிறுவன வேலைவாய்ப்பு:
இந்திய தேசிய கொடுப்பனவுகள் கழகம் ( NPCI ) தற்போது Advisory Services பணிக்கென காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் MBA பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிசார்ந்த துறையில் குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றும், Advisory Services பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் இப்பணிக்கு தகுதியுள்ள நபர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் ஆன்லைன் மூலம் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவிக்கப்படுகிறது.