பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Field Investigator பணிக்கு காலியிடங்கள் உள்ளதால் அதை நிரப்ப வேண்டி பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் விரைவாக இறுதித் தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்படுகிறது.
பல்கலைக்கழக வேலைவாய்ப்பு:
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, Field Investigator பணிக்கு ஒரே ஒரு காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு பற்றி தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களில் Post Graduation Degree, M.Phil, Ph.D தேர்ச்சி பெற்றிக்கவேண்டும் மற்றும் பணியில் குறைந்தது ஒரு ஆண்டு அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் ரூ.15,000/- வழங்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.
Field Investigator பணிக்கு தகுதியுடைய நபர்கள் 08/02/2023 அன்று நடைபெறும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து பிப்ரவரி 6 ம் தேதிக்குள் jags.nathi@pondiuni.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.