மத்திய அரசுத் துறையின் வணிகவியல் வங்கியான Bank of India வங்கியில், தற்போது காலியாக உள்ள Counsellor பதவிக்காக பல்வேறு காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டு, ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு காலிப் பணியிடம் நிரப்பப் படுவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது.
Bank of India-ன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
Bank of India வங்கியில் காலியாக உள்ள Counsellor பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த அறிவிப்பின் மூலம் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 65 ஆக இருக்க வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் வங்கித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் Counsellor பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு ரூ.18,000 மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.
இந்த Counsellor பதவிக்கு விண்ணப்பிக்கும் மேற்கண்ட தகுதிகளை பெற்ற நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். அதிகார அறிவிப்பில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்த பின்பு அதிகார அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 15.02.2023 என்ற தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.