காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுகாதார சங்கத்தில் Dental Surgeon, Trauma Registry Assistant (Staff Nurses), Dental Assistant, Auxiliary Nurse Midwife உள்ளிட்ட பல பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் பணி குறித்த கூடுதல் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
DHS வேலைவாய்ப்பு:
காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார சங்கம், Dental Surgeon, Trauma Registry Assistant (Staff Nurses), Dental Assistant, Auxiliary Nurse Midwife, NPHCE Physiotherapist, Data Entry Operator, Multi Purpose Hospital Worker ஆகிய பணிகளுக்கு 14 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு குறித்த தகவல்களை அரிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு, BDS, Diploma அல்லது Degree, BPT முடித்திருக்க வேண்டும் மற்றும் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியம் பணியை பொறுத்து ரூ.8,500/- முதல் ரூ.34,000/- வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்முகத்தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 15/02/2023 என்ற தேதி முடிவதற்குள் அலுவலக முகவரிக்கு அனுப்பி பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.