நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் (NHPC) நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள 19 காலியிடத்திற்கான COPA (Computer Operator and Programming Assistant ), Plumber, Electrician போன்ற பயிற்சி வகுப்பிற்கான அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது.
NHPC-ன் அறிவிப்பு விவரங்கள்:
NHPC அமைப்பானது பயிற்சி வகுப்பிற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் COPA (Computer Operator and Programming Assistant) வகுப்பிற்கு 8 காலியிடமும், Plumber பயிற்சி வகுப்பிற்கு 2 காலியிடமும், Electrician பயிற்சி வகுப்பிற்கு 9 காலியிடமும் என மொத்தமாக 19 காலியிடத்தை ஒதுக்கி திறமையான நபர்களின் மூலம் காலியிடத்தை நிரப்ப உள்ளது. மேலும் இதற்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது குறைந்தபட்சமாக 18 முதல் அதிகபட்சமாக 25 வயதுக்குள் இருப்பவர்களாக இருக்க வேண்டும்.
மேலும் இவ்வகுப்பிற்கு 10 வது தேர்ச்சி, ITI தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இவ்வகுப்பிற்கான முன்னுரிமை மற்றும் வயது வரம்பு குறித்த தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும். COPA (Computer Operator and Programming Assistant ), Plumber, Electrician போன்ற பயிற்சி வகுப்பிற்கு மதிப்பெண்கள் அடிப்படையில் பயிற்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.
இந்நிலையில் இரண்டு பயிற்சியாளர்கள் சமமான மதிப்பெண்கள் பெற்றிருந்தால் அவர்கள் MERIT அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் இவ்வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் விண்ணப்படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 28.02.2023 என்ற தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.