சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் தற்போது, Raw Mill, Coal Mill Operator மற்றும் Chemical Engineer போன்ற பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் விரைந்து இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்கவும்.
CCI லிமிடெட் வேலைவாய்ப்பு:
சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், Raw Mill, Coal Mill Operator மற்றும் Chemical Engineer ஆகிய பணிகளுக்கு ஒரே ஒரு காலிப் பணியிடம் மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வயது 62 க்கு மேல் இருக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு சார்ந்த கல்வி நிலையங்களில் SSC மற்றும் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணியில் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.15,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பணிக்கு தகுதியுள்ள நபர்கள் நேர்முகத்தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 10/02/2023 அன்று அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணலுக்கு விண்ணப்ப படிவம் மற்றும் போதிய ஆவணங்களுடன் சென்று நேரில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.