மத்திய புலனாய்வுத் துறையில் (CBI) காலியாக உள்ள Assistant Library and Information Officer பதவிக்காக ஒதுக்கட்டுள்ள 1 காலிப்பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது.
CBI-ன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
CBI வெளியிட்ட அறிவிப்பின்படி,Assistant Library and Information Officer பதவிக்காக ஒரே ஒரு காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது 56 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க உள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் PG/ UG/ Diploma in Library science/ Diploma in CA போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த Assistant Library and Information Officer பதவிக்கு level 6 of Pay Matrix 7 CPC அளவில் ஊதியம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் மேற்கண்ட தகுதிகளை பெற்ற நபர்கள் இப்பணிக்கு பிரதிநிதித்துவம் (Deputation) அல்லது பதவி உயர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.