Oil India லிமிடெட் நிறுவனம், Pharmacist, Paramedical Hospital Technician ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவாக இப்பணிகளுக்கு விண்ணப்பித்து பயன்பெறவும்.
Oil India வேலைவாய்ப்பு:
தற்போது Pharmacist, Paramedical Hospital Technician பணிகளுக்கு 10 காலியிடங்கள் உள்ளதாக Oil India லிமிடெட் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு குறைந்தபட்சம் 22 வயது முதல் 40 வயது என்றும், OBC பிரிவினருக்கு 43 வயது என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு Science பிரிவில் தேர்ச்சியும், பணி சார்ந்த துறையில் Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியம் Pharmacist பணிக்கு ரூ.19,500/-, Paramedical Hospital Technician பணிக்கு ரூ.16,640/- வழங்கப்படும் மற்றும் விண்ணப்பிப்பவர்கள் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் இப்பணிகளுக்கு தகுதி வாய்ந்தவர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலுக்கு சென்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.