இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆணையம், Project Research Officer- I / Scientist – I பணிக்காக காலியிடங்கள் உள்ளதால் அதை நிரப்ப வேண்டி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் விரைவாக இறுதி நாள் முடியும் முன் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது.
ICMR வேலைவாய்ப்பு:
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், Project Research Officer- I / Scientist – I பணிக்கு ஒரே ஒரு காலிப் பணியிடம் மட்டுமே இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என்று அறிவித்துள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் Master’s degree in Life Sciences, Ph.D அல்லது BDS, B.V.Sc degree, MPH (with one year experience) முடித்திருக்க வேண்டும் மற்றும் இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் ரூ.40,000/- + HRA சேர்த்து அளிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Scientist பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 14/02/2023 என்ற தேதி முடிவதற்குள் anemia.trial@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.