இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL ) நிறுவனத்தில் இருந்து Contingent Duty Medical Officers (CDMOs) பதவிக்காக காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
IOCL-ன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
IOCL நிறுவனத்தில் காலியாக உள்ள Contingent Duty Medical Officers (CDMOs) பதவிகளுக்காக ஒதுக்கட்டுள்ள பல்வேறு காலிப்பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு தகுதியும் திறமையும் வாய்ந்த பணியாளர்கள் மூலம் காலிப்பணியிடமானது நிரப்பப்பட உள்ளது.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் MBBS Qualification and 1 year of internship, MBBS with Diploma in Medical Specialty, PG qualifications i.e MD/MS போன்ற பணிக்கு சம்பந்தப்பட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் CDMOs பணிக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. MBBS Qualification and 1 year of internship படித்தவர்களுக்கு ரூ.89,400 ஊதியமும், MBBS with Diploma in Medical Specialty படித்தவர்களுக்கு ரூ.97,000 ஊதியமும், PG in MD/MS ரூ.1,04,400 ஊதியமும் வழங்கப்படுகிறது.
CDMOs பணிக்கு மேற்கண்ட தகுதிகளை பெற்ற நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். மேலும் இப்பணியில் பணிபுரிய ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் அதிகார அறிவிப்பில் உள்ள முகவரியில் 14.02.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.