Oil India Limited நிறுவனத்தில் தற்போது ஒப்பந்த முறையில் Contractual Boiler Operator பணிக்கு பகுதி வாரியாக காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு 40 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
OIL நிறுவன வேலைவாய்ப்பு:
OIL நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Contractual Boiler Operator பணிக்கு பகுதி வாரியாக 40 காலியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 40 வரை இருக்க வேண்டும் மற்றும் SC/ST பிரிவினருக்கு 45 ஆண்டுகளும், OBC-NCL பிரிவினருக்கு 43 ஆண்டுகளும் உச்ச வயது வரம்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் பணிக்கு தொடர்புடைய பிரிவில் இரண்டு ஆண்டுகள் பயின்றதற்கான வர்த்தக சான்றிதழ் அவசியமாகும். பணிக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணியை பொறுத்து குறைந்தபட்சம் ரூ.16,640/- முதல் அதிகபட்சம் ரூ.19,500/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Boiler Operator பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Interview மற்றும் Skill Test மூலமாக நியமிக்கப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து போதிய சான்றிதழ்களுடன் மார்ச் மாதம் 04 மற்றும் 06 தேதிகளில் அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.