சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில், Junior Engineer( Electrical and Instrumentation dept) பணிக்கு காலியாக உள்ள இரண்டு பணியிடங்களை தகுதியான மற்றும் திறமையுள்ள நபர்களை கொண்டு நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
CCI நிறுவன வேலைவாய்ப்பு:
Junior Engineer( Electrical and Instrumentation dept) பணிக்கு காலியாக உள்ள இரண்டு பணியிடங்களை நிரப்ப உள்ளதாக CCI வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த துறையில் ITI முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 20 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. Junior Engineer பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியம் ரூ.25,000/- வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
CCI நிறுவன பணிக்கு தகுதியானவர்கள் Personal interview மற்றும் Medical Examination மூலமாக தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட உள்ளனர். மேற்கண்ட திறன்களை கொண்ட நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் 24/02/2023 அன்று காலை 10 மணிக்கு நடக்கவிருக்கும் நேர்முகத்தேர்வில் பங்கேற்று பயனடையுமாறு அறிவிக்கப்படுகிறது.