NMDC தேசிய கனிம வளர்ச்சி கழகம், Administrative Officer Trainee பணிக்கு காலியாக உள்ள இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது மற்றும் இப்பணிக்கு 42 காலியிடங்கள் உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
NMDC கழக வேலைவாய்ப்பு:
NMDC தேசிய கனிம வளர்ச்சி கழகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, Administrative Officer Trainee பணிக்கென 42 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சம் 32 என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் Administrative Officer Trainee பணியில் Finance & Accounts துறைக்கு அரசு சார்ந்த கல்லூரியில் CA, ICWA – CMA முடித்தவராகவும், Materials & Purchase துறைக்கு Engineering and Technology முடித்தவராகவும், Personnel & Administration துறைக்கு Graduation with PG Degree அல்லது PG Diploma in Sociology முடித்திருக்க வேண்டும். இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியம் ரூ.37000 முதல் ரூ.130000/- வரை வழங்கப்படும்.
மேலும் இந்த பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் எழுத்து தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து http://www.nmdc.co.in/ என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 17.02.2023 தேதிக்குள் விரைவாக அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.