மெட்ராஸ் யூனிவர்சிட்டி பல்கலைக்கழகத்தில் தற்போது காலியாக உள்ள Project Technician பணிக்கென உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
University Of Madras-ன் வேலைவாய்ப்பு விவரங்கள் :
University Of Madras ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு, Project Technician பணிக்கான காலியிடத்தை நிரப்ப உள்ளது. மேலும் இப்பணிக்கு 01.01.2023 தேதியின் படி அதிகபட்சமாக 30 வயது உள்ளவராக இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் DMLT, B.Sc , Biological Science போன்ற படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு பல்கலைக்கழகத்தால் தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு ரூ.18,000 மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.
மேலும் இந்த பணிக்கு நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்த பின்பு, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 13.02.2023 தேதிக்குள் அனுப்பி விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.