சென்னையில் உள்ள கடலோர காவல்படை கப்பல் பராமரிப்பு ஆணையம் (CGSMA) apprentice பயிற்சிக்கு ஆட்கள் சேர்க்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பயிற்சிக்கு ஆர்வமுள்ள நபர்கள் பிப்ரவரி மாதம் 2,3,9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகின்றனர்.
CGSMA நிறுவன வேலைவாய்ப்பு:
கடலோர காவல்படை கப்பல் பராமரிப்பு ஆணையம் தொழில் பயிற்சியாளர்கள் (apprentice ) பயிற்சிக்கு ஆட்கள் சேர்க்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டது. இப்பயிற்சிக்கு Graduate Apprentice பணிக்கு இரண்டு இடங்களும், Diploma Apprentice பணிக்கு மூன்று இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பயிற்சிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையங்களில் Engineering Graduate, Diploma, BCA, BBA மற்றும் B.Com போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் மற்றும் Apprentice பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு Graduate Apprentice பணிக்கு ரூ.9000/- மற்றும் Diploma Apprentice பணிக்கு ரூ.8000/- மாதந்தோறும் உதவித் தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இப்பயிற்சிக்கு தகுதியுள்ள நபர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் கடலோர காவல்படை கப்பல் பராமரிப்பு ஆணையம் (சிஜிஎஸ்எம்ஏ) 56, சூரியநாராயண செட்டி தெரு, காசிமேடு சென்னை-600013 என்ற முகவரியில் பிப்ரவரி 2,3,9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் தகுந்த சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.