மேம்பட்ட கணினி மேம்பாட்டு மைய (CDAC) நிறுவனத்தில் Joint Director, Manager, Principal Technical Officer போன்ற பணிகளுக்காக ஒதுக்கட்டுள்ள 19 காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை CDAC நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் 28.02.2023 தேதிக்குள் விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.
CDAC-ன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
தற்போது CDAC நிறுவனமானது, Joint Director, Manager, Principal Technical Officer, Senior Admin Officer, Senior Technical Officer, Technical Officer போன்ற துறைகளில் உள்ள 19 காலியிடங்களை நிரப்புவது குறித்த, வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 56 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
மேலும் இப்பணிக்கு அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்களில் B.E/ B.Tech / MCA / MBA தேர்ச்சியுடன் கூடிய Pay Level 10 முதல் 13 வரை ஊதியம் பெறும் அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர். மேலும் CDAC நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்படும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,23,100 வரையிலான ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முகத் தேர்வின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அதிகார அறிவிப்பில் படிவம் பெற்று பூர்த்தி செய்த பின்பு, ரூ.500 விண்ணப்ப கட்டணம் செலுத்தி (SC/ST/PWD பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை) 28.02.2023 என்ற தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக, இப்பணிக்கென டிசம்பர் மாதம் வெளியான அறிவிப்பின் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.