BEL School ( CBSE ) தலைமையாசிரியர் பணிக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது மற்றும் முன் அனுபவம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் கல்வித்தகுதி, வயது வரம்பு போன்ற விவரங்கள் பற்றி அறிய கீழே பார்வையிடவும்.
BEL School வேலைவாய்ப்பு:
BEL ( CBSE ) பள்ளியில் தலைமையாசிரியர் பணிக்கு காலியிடங்கள் உள்ளதால் அதை நிரப்ப வேண்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு 01.03.2023 ம் தேதியின் படி, 45 முதல் 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு சார்ந்த கல்லூரியில் B.Ed மற்றும் முழுநேர பட்டப்படிப்பு முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். PG யில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஏதேனும் கல்வி நிறுவனத்தில் குறைந்தது 15 ஆண்டுகள் மேல்நிலை மாணவர்களுக்கு பாடங்கள் கற்பித்திருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.56,800/- முதல் ரூ.99,600 வரை வழங்கப்படும்.
மேலும் தலைமையாசிரியர் பணிக்கு தகுதியுள்ளவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 15.02.2023 என்ற இறுதி தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.