தொலைத்தொடர்பு துறை அமைப்பானது (Department of Telecommunication) தற்போது Stenography Cadre பதவிக்கான காலிப்பணியிடத்தை ஒதுக்கி தகுதியான பணியாளர்கள் மூலம் இத்துறையில் உள்ள 19 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
DOT-ன் வேலைவாய்ப்பு விவரங்கள் :
Department of Telecommunication (DOT) எனப்படும் தொலைத்தொடர்பு துறையில் காலியாக உள்ள 19 காலிப்பணியிடங்களில் திறமைவாய்ந்த பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு Stenography Cadre பதவிக்கு பணி அமர்த்தப்பட உள்ளனர். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பானது அதிகபட்சமாக 62 வயது நிரம்பியவராக இருப்பது அவசியம்.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மத்திய மற்றும் மாநில அரசு பதவிகளில் Pay Matrix Level 7 முதல் 11 அளவிலான ஊதியம் பெறும் அதிகாரிகளாக பணியாற்றியிருக்க வேண்டும். DOT துறையால் தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு அவர்களின் தகுதி மற்றும் பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிக்க இருக்கும் மேலே கூறிய தகுதிகளை பெற்ற நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் பரிந்துரைக்கப்பட்ட பக்கத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்த பின்பு arvindk.jha29@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 17.02.2023 தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.