கேரளா எழிமலாவில் அமைந்துள்ள இந்திய கடற்படையில் நான்கு ஆண்டு B.Tech படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே மாணவர்கள் 12/02/2023 என்ற தேதி முடிவதற்குள் விரைந்து விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது.
இந்திய கடற்படை விவரங்கள்:
இந்திய கடற்படை சமீபத்தில், 10,+2 திட்டத்தின் கீழ் B.Tech படிப்பில் சேர மாணவர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Executive & Technical Branch துறையில் 30 காலியிடங்களும், Education Branch துறையில் 5 காலியிடங்களும் என மொத்தம் 35 இடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 02/01/2004 தேதி முதல் 01/07/2006 தேதிக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10 மற்றும் 12 வகுப்புகளில் வேதியியல், கணிதம், ஆங்கிலம் போன்றவற்றில் குறைந்தது 50% மதிப்பெண்களுடனும், இயற்பியலில் 70% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் B.Tech படிப்பிற்கு தகுதியானவர்கள் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் https://www.joinindiannavy.