புதுச்சேரியின் தேசிய தொழில்நுட்ப கழகத்தில் Faculty பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பில் இப்பணிக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறவும்.
NIT ஆணைய வேலைவாய்ப்பு:
NIT ஆணையம் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், Faculty பணிக்கென ஒரே ஒரு காலியிடம் மட்டும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு பற்றி தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிட்டு தெரிந்து கொள்ளவும்.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் Post-Graduate degree, B.Ed, M.Ed , Ph. D ஏதேனும் ஒன்றில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும் மற்றும் பணிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு மாத ஊதியம் ரூ.35,000/- வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Faculty பணிக்கு தகுதியுடைய நபர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட தகுதிகளை கொண்ட நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் 16/02/2023 அன்று நடைபெறும் நேர்காணலில் பங்கேற்று பயன் பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.