பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம், Specialist, Senior Residents, Adjunct Faculty/ Visiting Faculty உள்ளிட்ட பணிகளுக்காக உள்ள காலியிடங்களை நிரப்ப தற்சமயத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் பணி குறித்த கூடுதல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ESIC ஆணையம் வேலைவாய்ப்பு:
ESIC ஆணையத்தில் Specialist, Senior Residents, Adjunct Faculty/ Visiting Faculty போன்ற பணிகளுக்கென்று உள்ள காலியிடங்களை நிரப்புவது குறித்து ESIC ஆணையம் அறிவிப்பில் கூறியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு பணியின் அடிப்படையில் அதிகபட்சம் 45, 67 மற்றும் 69 வயது இருக்கவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் PG Degree, Diploma மற்றும் MBBS போன்ற பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் இப்பணிக்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணியின் அடிப்படையில் மாதம் ரூ.1,18,204/- வரை சம்பளம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிகளுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் பிப்ரவரி 22 மற்றும் 24 ம் தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது.