பணியாளர்கள் மாநில காப்பீட்டு கழகம், Senior Residents, Specialists, Professor, Associate Professor & Assistant Professor போன்ற பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்து ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியானவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறவும்.
ESIC ஆணைய வேலைவாய்ப்பு:
ESIC ஆணையத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பில், Senior Residents, Specialists, Professor, Associate Professor & Assistant Professor உள்ளிட்ட பணிகளுக்கு 61 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயதானது பணியின் அடிப்படையில் அதிகபட்சம் 45, 67 மற்றும் 69 வயதுக்குள் இருக்கவேண்டும் என்று அறிவித்துள்ளது.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் MBBS, MD, DNB, PG Diploma ஆகிய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு மாத ஊதியம் ரூ.2,22,543/- வரை வழங்கப்படும் மற்றும் மாத ஊதியம் பணியை பொறுத்து மாறுபடும் என்று தெரிவித்துள்ளது.
இப்பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் பிப்ரவரி மாதம் 21, 22 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.