Project Scientist, Project Scientific Assistant, Project Technician & Project Jr. Asst போன்ற பணிகளுக்கு 89 காலியிடங்கள் இருப்பதாக NIOT அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் M.E, M.Tech, Ph.D, B.E, B.Tech, Msc ( Oceanography/ Physical Oceanography/ Chemical oceanography Physics /Ocean Technology) அல்லது Diploma (Mechanical / Mechatronics / Automobile Engineering) ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் என்று அறிவித்துள்ளது.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயதானது பணியின் அடிப்படையில் அதிகபட்சம் 35 முதல் 55 க்குள் இருக்க வேண்டும் மற்றும் இப்பணிகளுக்கென தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியம் Project Scientist – II பணிக்கு ரூ. 67,000/- + HRA, Project Scientist – I பணிக்கு ரூ. 56,000/- + HRA, Project Scientific Assistant, Project Technician(Fitter) மற்றும் Project Junior Assistant பணிகளுக்கு ரூ. 20,000/- + HRA வழங்கப்பட உள்ளது என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் NIOT பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் Personal Interview மற்றும் Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிக்கும் மேற்கண்ட திறன்களை கொண்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தின் மூலமாக 17.02.2023 முதல் 28.02.2023 வரை தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.