Reliance Industries நிறுவனம் தற்போது Field Executive பணிக்கு பல்வேறு காலியிடங்கள் இருப்பதால் அவ்விடங்களை நிரப்பும் பொருட்டு தற்சமயத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் Field Executive பணிக்கான கூடுதல் விவரங்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Reliance Industries வேலைவாய்ப்பு:
Field Executive பணிக்காக பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தற்போது Reliance Industries நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கண்டு தெரிந்து கொள்ளவும்.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரிகளில் B.Sc. அல்லது Diploma in Chemical Engineering அல்லது ITI / NCTVT ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் மற்றும் B.Sc/Diploma முடித்தவர்கள் 2 ஆண்டுகளும், ITI முடித்தவர்கள் 5 ஆண்டுகளும் பணியில் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியம் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Field Executive பணிக்கு தகுதியுடையவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கீழே வழங்கியுள்ள மின்னஞ்சல் முகவரி மூலமாக விரைவாக விண்ணப்பிக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.