திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேசிய நலவாழ்வு குழுமத்தில் (NHM) Dental Assistant, Health Inspector, Radiographer போன்ற பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 8 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.
NHM-ன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
தற்போது காலியாக உள்ள 8 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தேசிய நலவாழ்வு குழுமத்தில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. மேலும் இந்த அறிவிப்பின் மூலம் Dental Assistant பணிக்கு 3 காலிப்பணியிடமும், Health Inspector பணிக்கு 3 காலிப்பணியிடமும் , Radiographer பணிக்கு 2 காலிப்பணியிடமும் ஒதுக்கப்பட்டு இந்த பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப் பட உள்ளது.
இந்நிலையில் Health Inspector பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு,12 ஆம் வகுப்பு உயிரியல் சார்ந்த பாடப்பிரிவுகளில் தமிழ் வழி கல்வி தேர்ச்சி, மருத்துவ துறையில் அனுபவமும் மற்றும் Dental Assistant பணிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி,1 அல்லது 2 வருட பல் டெக்னீசியன் படிப்பில் தேர்ச்சியும், Radiographer பணிக்கு B.sc Radiography படிப்பில் தேர்ச்சியும் பெற்றிக்கவேண்டும். மேலும் Dental Assistant பணிக்கு ரூ.13,800 மாத ஊதியமும், Health Inspector பணிக்கு ரூ.14,000 மாத ஊதியமும், Radiographer பணிக்கு ரூ.13,300 மாத ஊதியமாகவும் வழங்கப்படுகிறது.
மேலும் இப்பணிக்கு மேற்கண்ட தகுதிகளை பெற்ற நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். மேலும் இப்பணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 10.02.2023 ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.