இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையைச்( ICMR ) சார்ந்த NIRRCH நிறுவனம், Research Associate III, Research Assistant, Statistician உள்ளிட்ட பல பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதால் இப்பணிகளுக்கு தகுதியானவர்களை நிரப்ப வேண்டி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு 2023:
ICMR நிறுவனம், Research Associate III, Research Assistant, Statistician, Junior Medical Officer, Medical Social Worker ஆகிய பணிகளில் காலியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது மற்றும் இப்பணிகளுக்கு 14 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பு குறைந்தபட்சம் 30 முதல் 35 க்குள் இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களில் P.Hd, MD, MSc(Demography, Anthropology, Psychology, Social Work, Biostatistics ) அல்லது MBBS ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியம் பணியை பொறுத்து ரூ.31,000 முதல் ரூ.60,000 வரை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்த பணிகளுக்கு தகுதி வாய்ந்தவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் முறையில் இறுதி நாள் முடிவதற்குள் விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.