The Naninital Bank Limited ஆனது Chief Digital Officer பதவிக்கான காலியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பதவி குறித்த கூடுதல் விவரங்களை இந்த பதிவில் விரிவாக காணலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
நைனிடால் வங்கி ஆனது Chief Digital Officer பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்காக 1 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்களின் வயதானது குறைந்தபட்சமாக 35 முதல் அதிகபட்சமாக 55 வரை இருக்க வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் B.E Computer science/Information system ,MCA ,மற்றும் பணி சார்ந்த படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் பணி சார்ந்த துறைகளில் 12 வருடம் முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு அளவுகோல் அடிப்படையில் குறைந்தபட்சமாக ரூ.76,010 முதல் அதிகபட்சமாக ரூ.1,00,350 வரை ஊதியமாக வழங்கப்படுகிறது.
மேலே கூறிய தகுதிகளை பெற்ற நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களின் தற்போதைய புகைப்படத்தை ஒட்டி கையெழுத்திட்ட படிவத்துடன், வயதுச் சான்று,10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சான்றிதல்கள்களை இணைத்து,தலைப்பில் ‘தலைமை டிஜிட்டல் அதிகாரி பதவிக்கான விண்ணப்பம்’ என குறிப்பிட்டு, விண்ணப்பங்களை அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் 31.01.2023 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.தெளிவற்ற மற்றும் கடைசி தேதிக்கு பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.