Ministry of Environment, Forests and Climate Change ஆனது Consultant, Library மற்றும் Information Assistant போன்ற பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகமானது நூலகம் மற்றும் தகவல் உதவியாளர், அலுவலக கண்காணிப்பாளர், ஸ்டெனோகிராபர் கிரேடு I மற்றும் ஆலோசகர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்காக பல காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு, Master Degree, Ph.D தேர்ச்சி பெற்ற மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.1,20,000 வரை மாதம் ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு/ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள தகுதிகளை பெற்ற விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் உள்ள படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து பின் அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.