மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் & டெக்னாலஜி நிறுவனம் (CIPET) நிறுவனத்தில் Assistant Placement Consultant க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு ஒரு காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
CIPET வேலைவாய்ப்பு:
CIPET நிறுவனம் Asst.Placement Consultant பணிக்கு ஒரு காலியிடம் உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு மற்றும் அரசு சார்ந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த துறையில் M.B.A பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ 35,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 35 ஆக இருக்க வேண்டும்.கூடுதல் விவரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்
மேலும் பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.மற்றும் விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் அறிக்கையில் குறிப்பிட்ட முகவரிக்கு 27/01/2023 தேதிக்குள் விரைந்து தபால் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.