ராணுவ போர் கல்லூரி ஆனது Consultant பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 12.02.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இப்பணி தொடர்பான கூடுதல் விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
ராணுவ போர் கல்லூரியானது Consultant பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்காக 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு மற்றும் தளர்வுகள் போன்ற கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று காணவும்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் M.Phil / P.hd படிப்புகளில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிந்தால் போதுமானது.விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ப ரூ.80,000 வரை மாதம் ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு , தனிப்பட்ட நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு பின் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலே குறிப்பிட்டுள்ள தகுதிகளை பெற்ற விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் உள்ள படிவத்தை பெற்று , பூர்த்தி செய்து பின் 12.02.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த தேதிக்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.