Broadcast Engineering Consultants India Limited (BECIL) நிறுவனமானது Controller of Examination,Sr. Account Assistant போன்ற பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 27.01.2023 & 09.02.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இப்பணி தொடர்பான கூடுதல் விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனமானது Controller of Examination,Sr. Account Assistant, Sr. Account Assistant (Account Receivable),Sr. Account Assistant,Executive-HR & others போன்ற பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்காக 21 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு மற்றும் தளர்வுகள் போன்ற கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று காணவும்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் Ayurveda/BAMS பாடப்பிரிவில் Graduate / MSc / M Pharma / B.Com / MBA / Post Graduate படிப்புகளில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிந்தால் போதுமானது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.17,446 முதல் ரூ.35,000 வரை மாதம் ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் திறன் சோதனைகள்/ நேர்காணல்/ Interaction போன்றவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் General, OBC, Women பிரிவினர் ரூ.885 கட்டணமும் SC/ST,EWS/PH பிரிவினர் ரூ.531 கட்டணமும் செலுத்தி அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் உள்ள படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து பின் 27.01.2023 & 09.02.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த தேதிக்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.