Defence Research and Development Organisation நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ் Junior Research Fellow பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப் பிப்பவர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்ய படுவார்கள்.
DRDO வேலைவாய்ப்பு:
DRDO ஆணையம் Junior Research Fellows பணிக்கு 15 காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் M.Sc , M.Tech ( Post Graduate Degree) , ICMR, NET ,GATE ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 28 ஆக நிர்ணயிக்கபட்டுள்ளது. வயது வரம்பு தளர்வு பற்றி அறிய அதிகாரபூர்வ தளத்தை பார்வையிட்டு கொள்ளவும்.மேலும் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அவர்களின் தகுதி மற்றும் திறமையை பொறுத்து மாத ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுந்த சான்றிதழ்களுடன் 01/03/2023 மற்றும் 02/03/2023 அன்று நேர்முக தேர்வில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. தகுதியுள்ள நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 14/02/2023 தேதிக்குள் hrddipas@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.